விளையாட்டு

மும்பை வீரர்களால் தென்னிந்திய வீரர்களை புகழ முடியாது - மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த முரளி விஜய் !

சில முன்னாள் மும்பை வீரர்களால் என்றுமே தென்னிந்திய வீரர்களை புகழ்ந்து பேச முடியாது என முரளி விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை வீரர்களால் தென்னிந்திய வீரர்களை புகழ முடியாது - மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த  முரளி விஜய் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் சொதப்பினாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அதிலும் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் அவர் பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் தனது இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து சொதப்பிய அவர் பின்னர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மும்பை வீரர்களால் தென்னிந்திய வீரர்களை புகழ முடியாது - மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த  முரளி விஜய் !

இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா 120 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா, அக்சர் படேல் அரைசதமடித்து ஆடி வருகின்றனர்.

மும்பை வீரர்களால் தென்னிந்திய வீரர்களை புகழ முடியாது - மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த  முரளி விஜய் !

இந்த போட்டியின்போது ரோகித் சர்மா சதமடித்ததும் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அரைசதத்தை சதமாக மாற்றும் வீரர்கள் பட்டியல் கட்டப்பட்டிருந்தது.அதில் 50 சதவீதத்தோடு ரோகித் சர்மா நான்காம் இடம் பெற்றிருந்தார். ஆனால், 60 சதவீதத்தோடு முதல் இடத்தில் தமிழக வீரர் முரளி விஜய் இடம்பெற்றிருந்தார்.

இதனைக் கண்டதும் கமெண்டரி பாக்ஸில் இருந்த மும்பையை சேர்ந்தவரும் முன்னாள் இந்திய வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சரியம் என கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முரளி விஜய் "சில முன்னாள் மும்பை வீரர்களால் என்றுமே தென்னிந்திய வீரர்களை புகழ்ந்து பேச முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார்.

பொதுவாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற மும்பை வீரர்கள் மும்பையை சேர்ந்த வீரர்கள் சுமாராக ஆடியிருந்தால் கூட ஆகா, ஓஹோ என புகழுவார்கள். ஆனால் மும்பையை தவிர பிற இடங்களை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக ஆடினால் கூட இதுயெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற ரகத்தில் அவர்களை கேலி செய்வார்கள். தற்போது அதனை குறிப்பிட்டே முரளி விஜய் இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories