விளையாட்டு

உலகின் நம்பர் 1 வீரரை ஒரே பந்தில் கதிகலங்க வைத்த நம்ம அஸ்வின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

உலகின் நம்பர் 1 வீரர் லபுஷேனுக்கு அஸ்வின் வீசிய பந்து எந்த பக்கம் திரும்பும் என தெரியாமல் அவர் திணறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகின் நம்பர் 1 வீரரை ஒரே பந்தில் கதிகலங்க வைத்த நம்ம அஸ்வின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

உலகின் நம்பர் 1 வீரரை ஒரே பந்தில் கதிகலங்க வைத்த நம்ம அஸ்வின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், கவாஜா ஆகியோரை அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஷமி , சிராஜ் ஆகியோர் வெளியேற்றினர். அடுத்ததாக ஜடேஜாவின் பந்தில் லபுசனே, ரென்ஸா, ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஹாண்ட்காப் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறிது பார்ட்னெர்ஷிப் அமைக்க அதை அஸ்வின் காலிசெய்தார்.

உலகின் நம்பர் 1 வீரரை ஒரே பந்தில் கதிகலங்க வைத்த நம்ம அஸ்வின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களை ஜடேஜா, அஸ்வின் ஜோடி விரைவாக வெளியேற்ற முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா 130 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா, அக்சர் படேல் அரைசதமடித்து ஆடி வருகின்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய வீரர் அஸ்வின் வீசிய பந்தை எதிர்கொண்ட உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் லபுஷேன், பந்து எந்த பக்கம் சுழலுது என்று தெரியாமல் தவறான ஷாட் ஆடினார். அதை பார்த்த அஸ்வின் , அந்த பக்கம் இல்ல , இந்த பக்கம் என்று செய்கை செய்தார். அதனை சிரித்து கொண்டே லபுஷேனும் பந்து இந்த பக்கம் சென்றது என்று கூறினார், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories