உலகம்
"என்னை திட்டித் தீர்த்தாலும் அதற்கு கட்டணம் ரூ.662 செலுத்தவேண்டும்" -விமர்சனங்களுக்கு எலான் மஸ்க் பதில் !
உலகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இதை உறுதி செய்யும் விதமாக ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கினார்.இதையடுத்து ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகக் கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க் இடையே பிரச்சனை எழுந்தது.
இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாக்குவரா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுபுள்ளிவைத்துள்ளார் எலான் மஸ்க. ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்ட கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்காகக் கருத வழங்கப்படும் புளுடிக்கிற்க கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். அவர் ட்விட்டரை வாங்கும் போதே இந்த பேச்சு அடிபட்டது. தற்போது ஊழியர்களை நீக்கியதை அடுத்தபடியாக புளுடிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார்.
அதன்படி ட்விட்டரில் புளுடிக் கணக்கு வைத்துள்ளவர்கள் மாதந்தோறும் ரூ.1600 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் புளுடிக் வசதி உள்ளவர்களின் கணக்கில் இருந்து புளுடிக் வசதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்ன் இந்த அறிவிப்புக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. ஆனால் பல்வேறு விமரிசனங்கள் வந்தாலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவு ஒன்றியை பதிவிட்டுள்ளார். அதில், "தினமும் என்னை திட்டித் தீர்க்கலாம், ஆனால், அதற்கு ரூ.662 கட்டணம்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!