உலகம்
நடுவானில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விமானிகள்.. விமான நிலையத்தை கடந்து பறந்ததால் பரபரப்பு! நடந்தது என்ன?
சூடானின் கார்ட்டூம் நகத்தில் இருந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த ET343 விமானம் கடத்த ஆகஸ்ட் 15ம் தேதி சென்றுகொண்டிருந்தது. அப்போது அடிஸ் அபாபா நகர விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான சிக்னலை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
ஆனால், அதற்கு பதில் சிக்னல் ஏதும் விமானத்தில் இருந்து வரவில்லை . மேலும், விமானம் தரையிறங்குவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் பலமுறை விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றும் அங்கிருந்து பதில் வராததால் விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்.
பின்னர் விமானம் தரையிறங்க வேண்டிய நேரத்துக்கு 30 நிமிடங்கள் கழிந்து விமானம் அடிஸ் அபாபாவில் தரையிறங்கியுள்ளது. பின்னர் நடந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விமானிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போதுதான் விமானிகள் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆட்டோ பைலட் மூலம் விமானம் இயங்கிக்கொண்டிருந்துள்ளது. ஆனால், இறங்கவேண்டிய இடத்தை கடந்த நிலையில், ஆட்டோ பைலட் அமைப்பு செயலிழந்து அலாரம் அடித்துள்ளது. அதன்பின்னரே விமானிகள் முழித்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!