உலகம்
ரூ.22 கோடிக்கு ஏலம் போன சட்டை.. - அப்படி என்ன Special ?
நிலவுக்கு சென்ற முதல் விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்கை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அவருடன் சென்ற இரண்டாவது நபரான அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரினை நம்மில் பலருக்கும் தெரியாது.
1996 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 'அப்பல்லோ 11'என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா, விண்வெளிக்கு அனுப்பியது. நிலவின் தோற்றத்தை ஆராய அமெரிக்கா எடுத்த பெரும் முயற்சியில், நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலியன்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு பெற்றிந்தனர்.
விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பிய நான்கு நாட்களில் நிலவை சென்றடைந்தது. அப்போது சுமார் 6 மணி நேரங்களுக்கு பிறகு விண்கலத்தில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தார். இதனால் நிலவில் கால் பதித்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றுள்ளார். இதையடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கி, இரண்டாவதாக நிலவில் கால் வைத்த மனிதர் என்ற பெருமைக்கு உரியவரானார்.
இப்படி இரண்டாவதாக நிலவில் கால் வைத்து சாதனை படைத்த ஆல்ட்ரினுக்கு, தற்போது 92 வயதாகும் நிலையில், அவர் அப்போது அணிந்திருந்த விண்வெளி ஆடை அண்மையில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் இவரது விண்வெளி உடை 2.8 மில்லியன் டாலருக்கு,( இந்திய மதிப்பில் 22.37 கோடி ரூபாய்) ஏலம் போனது.
இந்த விண்வெளி ஜாக்கெட்டின் முன்புறம் நாசா லோகோவுடன், அப்பல்லோ-11 மிஷன் சின்னமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இடது பக்கத்தில் இருதயத்திற்கு மேலே, 'E ஆல்ட்ரின்' என்ற அவரின் பெயர் குறியும் இடம்பெற்றுள்ளது. அதன் இடது தோளில் அமெரிக்கக் கொடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!