உலகம்

மீண்டும் ஒரு இனவெறி...கருப்பின இளைஞரை சுட்டு கொன்ற போலிஸார். உடம்பில் 60 குண்டுகள் பாய்ந்த கொடுமை!

இந்தியாவில் சாதி அடக்குமுறையால் பொதுமக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட சம்பவத்தை போல நூற்றாண்டுகளான அமெரிக்காவில் கருப்பு இனமக்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் சாதியை வைத்து ஒருவர் எடைபோடப்படுவதை போலவே அமெரிக்காவிவிழும் கறுப்பின மக்கள் பார்க்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் வெள்ளை இனத்தை சேர்ந்த காவலர் ஒருவரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அதே போல அமெரிக்க காவல்துறையால் கறுப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ என்ற பகுதியில், ஜெய்லேண்ட் வாக்கர் என்ற 25 வயது கறுப்பின இளைஞர் ஜூன் 28 ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு போக்குவரத்து விதிமீறியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது காரை போலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

ஆனால் ஜெய்லேண்ட் வாக்கர் சரண் அடைய மறுத்து தனது காரை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். பின்னர் இறுதியாக அவரது வாகனத்தை போலிஸார் மடக்கியுள்ளனர். அப்போது காரில் இருந்து குடித்து வாக்கர் தப்பித்து ஓடியுள்ளார்.

அப்போது போலிஸார் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெய்லேண்ட் வாக்கர் உயிரிழந்துள்ளார். வெறும் போக்குவரத்துக்கு விதிமீறலுக்காக கறுப்பின இளைஞரை போலிஸார் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜெய்லேண்ட் வாக்கரை நோக்கி 90 முறை போலிஸார் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 60 குண்டுகள் வாக்கர் மேல் பாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக அமெரிக்காவில் தற்போது பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

Also Read: ஒரு நாள் பாக்கெட் மணி மட்டும் 40 லட்சம் ரூபாய்.. இணையத்தை அலற விடும் LITTLE PRINCESS!