உலகம்

ஒரு நாள் பாக்கெட் மணி மட்டும் 40 லட்சம் ரூபாய்.. இணையத்தை அலற விடும் LITTLE PRINCESS!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு நாள் பாக்கெட் மணியாக 40 லட்சம் ரூபாய் பெறுவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு நாள் பாக்கெட் மணி மட்டும்  40 லட்சம் ரூபாய்.. இணையத்தை அலற விடும் LITTLE PRINCESS!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் ரோமா அப்டெசிலம். டிக்டாக் பிரபலமான இவரை 79 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கையும் வைத்து அதில் தகவல்களை பரிமாறி வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போட்ட ஒற்றை பதிவு ஒன்று இவரை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது. அதில், தனக்கு ஒரு நாள் பாக்கெட் மணி மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என கூறியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் அளவு ஒரு நாள் பாக்கெட் மணி பெறுகிறார்.

ஒரு நாள் பாக்கெட் மணி மட்டும்  40 லட்சம் ரூபாய்.. இணையத்தை அலற விடும் LITTLE PRINCESS!

இது குறித்து கூறியுள்ள ரோமா அப்டெசிலம், நான் தினமும் காலையில் எழுந்து ஜிம்முக்கு போவேன். பின்னர் எனது தோழிகளுடன் ஷாப்பிங்கிற்குச் செல்வேன். இதற்கு பாக்கெட் மணி மட்டும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் என கூறியுள்ளார்.

மேலும் தனது வாழ்நாள் லட்சியமே பெற்றோர் சேமித்துவைத்துள்ள பணத்தை செலவு செய்வதுதான் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், தனது கண் புருவங்களை அழகு படுத்த ஒரு நாள் செலவு மட்டும் 600 டாலர் என கூறியுள்ளார். மேலும் தான் தினமும் வாங்கி குவிக்கும் பொருள்களையும் அவர் காட்சி படுத்தியுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு இணையத்தில் பலர் வியந்து பேசி வருகின்றனர். இவர் வெளியிட்ட இந்த தகவலின் மூலம் உலகத்திலேயே அதிக அளவு பாக்கெட் மணி வாங்கும் லிட்டில் பிரின்ஸஸாக இவர் மாறியுள்ளார் என இணையவாசிகள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories