உலகம்
“ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு - ஆளும் கட்சி MP உயிரிழப்பு” : இலங்கையில் என்ன நடக்கிறது?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில், அந்நாட்டு மக்கள் தொடர்ப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்விளைவாக, ஜனாதிபதி கோத்த பயராஜபக்சே பதவி விலகியுள்ளார்.
பயராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடையே வன்முறை மூண்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனிடையே கொழும்புவின் புறநகர் பகுதியான நிட்டம்புவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது காரில் சென்று கொண்டிருந்த போது அவரது காரை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். இதனிடையே அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது, இலங்கையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டை போராட்டக்கார்கள் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அம்மாகன மேயர்கள் இரண்டு பேர் வீடுகளும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!