உலகம்

கொரோனா மானியம் பெற மோசடி செய்த பெண்.. 16 மாதம் சிறைத் தண்டனை வழங்கிய சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ராஜ்போல் மாலினி. இந்திய வம்சாவளியான இவர் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பரவிய கொரோனா தொற்று காரணமாக தனக்கு வேலை பறிபோனதாக கூறி கொரோனா மானியம் பெற்று மோசடி செய்துள்ளார்.மேலும், இவர் வேலை பார்த்து வந்த கட்டுமான நிறுவனத்தில் 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலரைத் திருடியுள்ளார்.

இந்த மோசடிகள் தொடர்பாக போலிஸார் மாலினியைக் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி விசாரணையில் கொரோனா மானியத்திற்காக இவர் கொடுத்த பணி நீக்கக் கடிதம் போலியானது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுமான நிறுவனத்தின் பணத்தையும் கையாடல் செய்துள்ளதும் ஆதாரங்களுடன் போலிஸார் நிரூபித்துள்ளனர் என கூறி மாலிக்கு 16 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: அமெரிக்காவை ஒரேநாளில் நிர்மூலமாக்கிய சூறாவளி.. 100 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!