உலகம்

அமெரிக்காவை ஒரேநாளில் நிர்மூலமாக்கிய சூறாவளி.. 100 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தைத் தாக்கிய சூறாவளியால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவை ஒரேநாளில் நிர்மூலமாக்கிய சூறாவளி.. 100 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ளது கென்டக்கி மாகாணம். இங்கு நேற்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பொதுமக்களின் வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் சூறாவளி காற்றால் சேதமடைந்துள்ளன.

இதனால் இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. முழு மீட்புப் பணிகள் முடிந்த பிறகே உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரம் தெரியவரும் என அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கென்டக்கி பகுதியில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை சூறாவளிக் காற்றில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதில் 110 தொழிலாளர்கள் அப்போது வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவை ஒரேநாளில் நிர்மூலமாக்கிய சூறாவளி.. 100 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!
அமெரிக்காவை ஒரேநாளில் நிர்மூலமாக்கிய சூறாவளி.. 100 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!

தொழிற்சாலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 110 பேரில் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கென்டக்கி மாகாணத்தின் ஆளுநர் ஆண்டி பெஸ்ஹீர் கூறுகையில், “கென்டக்கி வரலாற்றில் இப்படியொரு சூறாவளியை நாங்கள் இதுவரை சந்தித்ததே இல்லை. சூறாவளிக் காற்றால் வீடுகள் பலவும் இடித்து விழுந்துள்ளன.

மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 100 பேருக்கு மேல் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் எண்ணுகிறோம்” என தெரிவித்துள்ளார். கென்டக்கி மாகாணத்தைப் போன்ற அமெரிக்காவில் உள்ள ஐந்து மாகாணங்களையும் சூறாவளிக் காற்று பதம்பார்த்து சென்றுள்ளது. இந்த மாகாணங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories