உலகம்
ராணுவ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதாரத் தடை : மியான்மருக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
தேர்தலில் மோசடி செய்ததாக தேசிய ஜனநாயக லீக் கட்சியினரைக் கைது செய்ததாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. இப்போது ஆட்சியதிகாரம் ராணுவத் தளபதி மின் ஆங் லெய்ங்கிடம் உள்ளது. இவர் வந்தவுடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளார்.
யாங்கூனில் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிற்கின்றனர். தேசிய ஜனநாயக லீக் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மொபைல் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிந்து ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே ராணுவத்துக்கும் அரசுக்கும் மோதல் இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் ராணுவ அடக்குமுறைகள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மீண்டும் தலைவிரித்தாடும் என்று அவர்கள் மத்தியில் அச்சமேற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் வருகை அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் சக்திகளை கடுமையாக எச்சரிக்கிறோம் என்றார்.
“சமீபத்திய தேர்தல் முடிவுகளை மாற்றும் எந்த ஒரு சக்தியையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. மியான்மரின் ஜனநாயக மாற்றத்துக்கு தடை ஏற்படுத்த அனுமதியோம். இப்போது ராணுவப்புரட்சியை வாபஸ் பெற்று தலைவர்களை விடுதலை செய்யவில்லை எனில் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
“ஊழல் Deal முடிக்க பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கும் பஞ்ச் டயலாக் CM” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
பாசிச எதிர்ப்புக்கெல்லாம் கூப்பிடாதீர்கள் ; செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா? - தயாநிதிமாறன் MP!
-
MLA-க்களை Purchase செய்ய பணம் போதாததால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க திட்டமா? : மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
ஜந்தர் மந்தர் - தலைநகரில் ஒலித்த எளிய மக்களின் குரல்.. இனி போராட அனுமதி இல்லை.. பாஜக அரசின் ஒடுக்குமுறை !
-
“100% வெளி சந்தையில் மின் கொள்முதல் செய்து மின்துறையை சீரழிக்கிறது தவெக அரசு!” : செந்தில் பாலாஜி கண்டனம்!