உலகம்

“உலகம் சோர்வடையலாம்; ஆனால், கொரோனா சோர்வடையாது” : மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் WHO இயக்குநர் !

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்றளவில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.12 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பால், 12 லட்சத்து 68 ஆயிரத்து 905 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்பரமாக ஈடுபட்டுள்ளன.

தடுப்பு மருந்துகள் இல்லாத சூழலில், மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாக்க சமூக இடைவெளி, மாஸ்க் போன்ற அத்தியவசிய நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், கொரோனா பரவல் தொடங்கி 8 மாதங்கள் ஆன சூழலில், மக்கள் அச்சமின்றி பொதுவெளியில் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவலால் மக்கள் வேண்டுமானலும் சோர்வாகலாம், ஆனால், கொரோனா தொற்று சோர்வாகாது என உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிகுறியக்கு பிறகு தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் இதுதொடர்பாக கூறுகையில், “நாம் கொரோனா உடன் இருந்த நிலையில் இருந்து சோர்வடையலாம். ஆனால், கொரோனா நம்மிடம் இருந்து சோர்வடையாது.

கொரோனா மிகவும் பலவீனமாகவர்களைதான் குறிவைத்து வேட்டையாடுகிறது; இதனால் மற்றப் பிரிவுகளும் பாதிக்கின்றனர். குறிப்பாக, வறுமை, பசி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மைக்கு தடுப்பூசி என எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்தியாவில் மளமளவென உயரும் கொரோனா தொற்று: ICMR எச்சரிக்கை மீறும் பொதுமக்கள்!