Corona Virus

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்தியாவில் மளமளவென உயரும் கொரோனா தொற்று: ICMR எச்சரிக்கை மீறும் பொதுமக்கள்!

தீபாவளி பண்டிகை நெருக்குவதால், கொரொனா பரவல் அதிகரிக்க வாய்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 38,073 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,91,730 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 448 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 79,17,373 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 42,033 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 79,17,373 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 5,05,265 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்தியாவில் மளமளவென உயரும் கொரோனா தொற்று: ICMR எச்சரிக்கை மீறும் பொதுமக்கள்!

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 92.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.48% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.96% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 8,53,401 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11,85,72,192 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்தியாவில் மளமளவென உயரும் கொரோனா தொற்று: ICMR எச்சரிக்கை மீறும் பொதுமக்கள்!

இந்த நிலையில், குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய்க்கிருமிகளின் தாக்கம் பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மாஸ்க் அணியாமல் எந்தக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்தது.

ஆனாலும் தீபாவளி பண்டிக்கைநெருங்கும் இந்த வேளையில், பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மதிக்காமல், சமூக இடைவெளிய கடைபிடிக்காமல் செயல்படுவது மேலும் கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது. என ம்ருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories