உலகம்
“ஈரானையும் விட்டு வைக்காத கொரோனா”: துணை அதிபர், சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட 245 பேருக்கு வைரஸ் பாதிப்பு!
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரஸினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இஸ்ரேல், ஈரான், லெபனான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் பரவி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஈரான் மிகவும் ஆபத்தான சூழலைச் சந்திப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து வருகிறது.
குறிப்பாக, ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரான் துணை அதிபர் மசூமே எப்டருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இதுவரை 245 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பால் இதுவரை 19 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் கொரோனா பாதிப்பால் மேலும் பொருளாதார சரிவை எதிர்கொள்வதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!
-
திராவிட மாடலில் உழவர்கள் பெற்ற நலன்! : வேளாண் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
-
112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!