உலகம்
பாலியல் தொல்லையில் இருந்து இளம்பெண்ணைக் காப்பாற்றிய ‘கொரோனா’ வைரஸ்... சீனாவில் ஒரு விநோத நிகழ்வு!
சீனாவின் வூஹான் நகரில் உருவான நாவல் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி, சர்வதேச மருத்துவ அவசர நிலையை அறிவித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 722 பேர் சீனாவில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வூஹான் நகரிலிருந்து சுமார் 3 மணிநேர பயணத் தொலைவில் உள்ளது ஜிங்ஷான் எனும் கிராமம். கடந்த வாரம், இங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக இளைஞன் ஒருவன் புகுந்துள்ளான். அப்போது அந்த வீட்டில் ஓர் இளம்பெண் தனியாக இருப்பதைக் கண்ட கொள்ளையன், அந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
அந்த இளைஞனிடம் இருந்து அந்தப் பெண் தப்பிக்க முயன்றாலும் விடாமல் துரத்தியுள்ளான். உடனே சுதாரித்த அந்தப் பெண் பலமாக இருமி பாசாங்கு காட்டியுள்ளார். மேலும், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலேயே வீட்டில் தனியாக இருக்கிறேன் என்றும் அந்தப் பெண் பொய் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டதும், பின்வாங்கிய கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதனையடுத்து, அந்தப் பெண் போலிஸிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் அந்த இளைஞனை கண்டுபிடித்த சீன போலிஸார் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!