ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ்
உலகம்

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் அதிகபட்ச பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்! : ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார்.

மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கும் மசோதவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மாநிலங்கவையில் மசோதா நிறைவேறியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் தங்களது எல்லையில் அத்துமீறல், ஊடுருவல் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கையாக அதிகளவு ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் அதிகபட்ச பொறுமை கடைபிடிக்க வேண்டுமென்று ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்றையதினம் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் பொது அவர் கூறியதாவது, "சமீபகாலமாக இருநாடுகளும் தங்களின் எல்லைப் பகுதியில் இராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐ.நா., ராணுவ நடவடிக்கை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது. தற்போது நிலவும் பதற்ற சூழலில் இரண்டு நாடுகளும் அதிகபட்ச பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்”. என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.