Viral

Follower குறைந்ததால் விபரீத முடிவெடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் : நடந்தது என்ன?

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் இளைஞர்கள் மத்தியில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதில் தினந்தோறும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிடுவது அவர்களின் வாடிக்கையான ஒன்றாக இன்றைய தினம் மாறிவிட்டது. அதிலும் பலர் Content creator, influencer-களாக இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது பக்கத்தை Engaged-வைத்துகொள்ள ஏதாவது Content வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது பலருக்கு தங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்து சென்று இருக்கும். ஆனால் பலரும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

தங்களது பக்கத்தில் இருந்து ஒரு Follower குறைந்தாலும்கூட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அப்படிதான் இன்ஸ்டாகிராம் பிரபலம் மிஷா அகர்வால் என்ற இளம் பெண், தனது பக்கத்தில் இருந்து Follower குறைந்ததால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

இது குறித்து அவரது சகோதரி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "1 மில்லியன் Follower இருக்க வேண்டும் என்பதுதான் மிஷாவின் கனவாக இருந்தது. அவளது பக்கத்தை 3.5 லட்சம் பேர் பின்தொடர்ந்து இருந்தனர். ஆனால் சில நாட்களாகவே அவளது பகத்தில் இருந்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. இதனால் அவள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துவந்தால். இப்போது அவள் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டாள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: பாபா ராம்தேவ் தனி உலகத்தில் வாழ்கிறாரா? : மத வெறுப்பை தூண்டும் விளம்பரம் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!