Viral
Cadbury சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு... வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்த காங். நிர்வாகி!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றுதான் சாக்லேட். அதில் நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுவது Cadbury நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட் வகைகள். அதிலும் முக்கியமாக பலருக்கும் விரும்பத்தக்க ஒன்றாக விளங்குவது Dairy Milk. இப்படி ஆசைஆசையாய் பலரும் சாக்லேட் வாங்கும்போது, அதில் புழு போன்ற பூச்சிகள் கண்டறியப்படுவது தற்போது அடிக்கடி நிகழும் நிகழ்வாகவே இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் கூட, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாக்லேட் தினத்தன்று மெட்ரோ இரயில் நிலையத்தில் Dairy Milk வாங்கிய இளைஞர் ஒருவர், அதில் உயிருடன் புழு ஒன்று நெளிந்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி, Cadbury சாக்லேட்டில் புழு இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருப்பவர் அக்ஷய் ஜெயின் (Akshay Jain). இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த செப்.19-ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் வாங்கிய Cadbury Temptation Rum சாக்லேட்டில் ஒரு புழு கண்டுபிடிக்கப்பட்டது. நான் பல ஆண்டுகளாக இந்த சாக்லேட்டை வாங்கி உண்டு வருகிறேன். ஆனால் இது எனக்கு இப்போது ஒரு மோசமான அனுபவமாக மாறிவிட்டது. இது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று புழு இருந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இவரது புகாருக்கு Cadbury நிறுவனம் முறையாக பதிலளிக்கவில்லை என்பதால், “மிகவும் மோசமான வாடிக்கையாளர் ஆதரவு” என்று மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து “உங்கள் மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம். உங்கள் புகாரை எழுத்துப்பூர்வமாக அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறோம்” என்று Cadbury நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கம் தெரிவித்திருந்தது.
காங்கிரஸ் நிர்வாகி அக்ஷயின் புகாருக்கு கீழே Cadbury நிறுவனத்தின் சாக்லேட்டுக்கு எதிராக பல்வேறு புகார்களும், கண்டனங்களும் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி Cadbury நிறுவனத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!