Viral
சாலையில் ஸ்டண்ட் செய்த ‘Spiderman’ couple... தட்டி தூக்கிய டெல்லி போலீஸ் - நடந்தது என்ன?
டெல்லியின் நஜாஃப்கார்க் (Najafgarh) என்ற பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (20). இவரது தோழி அஞ்சலி (19). இருவரும் மாணவர்களாக இருக்கும் நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் Spiderman உடை அணிந்து ஆதித்யா பைக் ஓட்டியுள்ளார். அவருடன் அவரது பெண் தோழியும், Spiderwoman உடை அணிந்து, பைக்கின் பின்புறம் அமர்ந்து சென்றுள்ளார்.
அப்போது இருவரும் தங்கள் கைகளை நீட்டியபடி பைக்கில் அந்த பகுதியில் வலம் வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டானது. இதையடுத்து இந்த வீடியோவில், அவர்கள் சாலை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
விசாரித்ததில் அந்த ஜோடியிடம் லைசன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. லைசன்ஸ் இல்லாமல், வண்டியின் நம்பர் பிளேட், கண்ணாடி இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் சாலையில் சாகசம் செய்வது போல் கையை வண்டியை ஓட்டிக்கொண்டே கையை நீட்டி சென்ற இந்தியன் Spiderman ஜோடியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ஒரு பெண் மற்றும் ஆண் பைக்கில் சூப்பர் ஹீரோ உடை அணிந்து சாகசம் செய்துள்ளனர். அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை கைது செய்த பிறகு அவர்களிடம் லைசன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் ஹெல்மெட் அணியாமலும் சாலை விதிகளை மீறியுள்ளனர்." என்றார்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?