Viral
போலிஸ் காரை திருடி Selfie எடுத்து வெளியிட்ட வாலிபர் : குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத் மாநிலம் துவாராக பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 28ம் தேதி போலிஸ் கார் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து காரை எடுக்க வெளியே வந்த போலிஸார் கார் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு காவல் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் காரை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து அருகே இருந்த காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை தொடங்கிய போலிஸார் 6 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட காரை கண்டுபிடித்தனர். பிறகு காரை திருடிச் சென்ற நபரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் பெயர் மோகித் சர்மா என்று தெரியவந்தது. காரை எடுத்துச் சென்ற அவர் 200 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் திருடப்பட்ட போலிஸ் வாகனத்துடன் செல்ஃபி எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கூட கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. போலிஸ் காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையை இளைஞர் ஒருவர் போலிஸ் ஜீப்பைத் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.62 கோடி செலவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கலைஞர் இன்று இல்லை.. ஆனால் அவர் பேசப்படுகிறார் ”: எழுத்தாளர் இமையம்!
-
சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! : “முறைகேடு நடைபெறவில்லை” என உத்தரவு!
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!