Viral
அதிக சத்தத்துடன் கூடிய இசை மாரடைப்பை ஏற்படுத்துமா? 2019ம் ஆண்டே வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு!
இந்தியாவில் திருமண நிகழ்ச்சி, உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது இளைஞர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கூட பீகாரில் திருமண நிகழ்ச்சியின் போது அதிகமாக இசைக்கப்பட்ட DJ இசையால் மனமேடையிலேயே மாப்பிள்ளை சரிந்து விழுந்து இறந்தார். திருமண நிகழ்ச்சியில் அதிக டெசிபலுடன் எழுப்பப்பட்டDJ இசையால் தனதுக்கு அசவுகரியம் இருப்பதாக அவர் கூறிய சிறிது நேரத்தில் இறந்ததாக குடும்பத்தினர் கூறியிருந்தனர்.
அதேபோல் தெலுங்கானாவில் 19 வயது இளைஞர் ஒருவர் உறவினர் திருமண நிகழ்ச்சியில் அங்கு ஓடிக் கொண்டு இருந்த இசைக்குத் துள்ளல் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இப்படி திருமண நிகழ்ச்சியின் போது இசைக்கு நடனமாடும்போது இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் மாரடைப்பு ஏற்படலாம் என கடந்த 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய மருத்துவ இதழ் ஒன்று கூறி இருக்கின்றது.
மேலும் இரைச்சல் நிலவும் மார்க்கெட் பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் 500 பேர்களிடம் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவில், இதயம் தொடர்பான எந்த நோய் அறிகுறிகளும் இல்லாதவர்கள் கூட அதிக சத்தத்தால் இருதயம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது.
சராசரியாக ஒரு நாள் என்ற அளவில் 5 டெசிபல் சத்தத்தை அதிகப்படுத்தும் போது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதயம் தொடர்பான பிற தீவிர பாதிப்புகள் 34 % அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இதே போன்ற ஒரு ஆய்வு ஜெர்மனியில் உள்ள மைன்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் அதிக இரைச்சல் எதுவாக இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரித்தால் மனிதனின் இதயத்திற்குத் தீங்கை ஏற்படுத்துகிறதாம் என கூறுகிறது. இந்த ஆய்வு 35-வயது முதல் 74 வயது வரை உள்ள 15000 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!