Viral

சிறந்த உணவு : முதலிடத்தை பிடித்த இத்தாலி.. இந்தியாவின் Hyderabad Briyani-க்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

உணவு - வாழ்வதற்கு அடிப்படையான விஷயங்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ அத்தியாவசியமான ஒன்றுதான் உணவு. உலகில் பலவகையான உணவுகள் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களுக்கு ஏற்ப அந்த உணவுகள் அமையும்.

மேலும் அந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உணவுகள் மாறுபடும். எடுத்துக்காட்டாக, இந்தியாவிலேயே வட இந்தியா - தென் இந்தியாவின் உணவு வகைகள் மாறுபட்டு காணப்படும். அங்கே முழுவதும் சப்பாத்தி, பருப்புதான் அதிகமாக காணப்படும். ஆனால் தமிழ்நாட்டிலோ சோறு குழம்பு இல்லாமல் யாருக்கும் சாப்பாடு உள்ளே இறங்காது.

இவ்வளவு ஏன், தமிழ்நாட்டிலே மாவட்டந்தோறும் உணவு பட்டியல் சில நேரங்களில் மாறும், பெயர்களும் வெவ்வேறாக அழைக்கப்படும். இப்படி மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு என கலாச்சாரங்களுக்கு ஏற்ப உடைகள், மொழிகள் மட்டுமல்லாமல் உணவுகளும் மாறும்.

இதனால் உலகில் உள்ள உணவு வகைகளில் சிறந்த உணவிற்கு 'டேஸ்ட்அட்லஸ்' (TasteAtlas) என்ற விருதுகள் அறிவித்தது. அதன்படி, 2022ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலை TasteAtlas தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.

அதில் 95 நாடுகள் இடம்பெற்று இத்தாலி முதல் இடத்தையும், கிரீஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதில் இந்தியா 4.54 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் சிறந்த 100 உணவுகளின் பட்டியலில் இந்திய உணவான Shahi Panneer - 28-வது இடத்தையும், Butter Chicken - 53-வது இடத்தையும் பிடித்துள்ளது. அதோடு Kuruma - 55-வது இடத்தையும், Vindaloo - 71-வது இடத்தையும், Hyderabad Biriyani - 79-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியல் பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையிலே அமைக்கப்பட்டுள்ளது. TasteAtlas விருதுகள் 2022 முடிவுகளின்படி, 400-க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், வெண்ணெய் பூண்டு நான் மற்றும் கீமா ஆகியவை இந்தியாவில் சிறந்த உணவுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.