Viral
6 அடி உயரம் 90 கிலோ எடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்.. அசத்திய பேக்கரி!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது ராஜேஸ்வரி ஸ்வீட் பேக்கரி. இங்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் கேக் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி, வலது கையை உயர்த்தியபடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிற்பது போல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேக் பலரையும் கவர்ந்துள்ளது.
சுமார் 6 அடியில் 90 கிலோவில் சர்க்கரை, 80 முட்டை கலந்த கலவையால் 2 நாட்களில் பேக்கரி உரிமையாளர் செல்வம் மற்றும் ஊழியர்கள் 4 பேர் குழுவாகச் சேர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு உருவத்தை கேக்காக தயாரித்துள்ளது. இந்த கேக் இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வடிவத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
இது குறித்து பேக்கரி உரிமையாளர் செல்வம் கூறுகையில், " தமிழ்நாடு முதலமைச்சரின் ஒன்றரை ஆண்டுக் கால ஆட்சியின் செயல்பாடுகள் பாராட்டக்கூடிய விதமாக 90 கிலோ எடையில் முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்துள்ளோம். பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் அவர் பிரம்மாண்டமாக நிற்பது போல் இந்த கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!