Viral

வலையில் சிக்கிய 550 கிலோ எடை கொண்ட அரியவகை மீன்: ஒரே இரவில் மீனவருக்கு அடித்த லக்கி ப்ரைஸ் என்ன தெரியுமா?

ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒரு மீனவர் வலையில் 550 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன் சிக்கியுள்ளது.

பிறகு மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீனைக் கடலிலிருந்து படகில் ஏற்றி கரைக்குக் கொண்டுவந்தனர். அப்போதுதான் வலையில் சிக்கியது அரியவகை மீனான செய்லர் மார்லின் மீன் என்பது தெரியவந்தது. இந்த மீனைத் தமிழ்நாட்டில் கொப்பரக்குல்லா என்று அழைக்கப்படுகிறது.

இந்த அரியவகை மீன் ஏலத்திற்கு எடுக்கப் பலரும் முன்வந்தனர். இதையடுத்து இந்த மீன் ரூ. 1 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த கொப்பரக்குல்லா மீன் மார்லின்கள் இஸ்டியோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள், இதில் சுமார் 10 இனங்கள் உள்ளன.

இந்த மீன் நீளமான உடல், ஈட்டி போன்ற மூக்கை கொண்டு இருக்கும். மருத்துவ குணம் கொண்டதால் இந்த மீன் வகைகள் பல லட்சத்திற்கு விற்பனையாகிறது. இந்த வகை மீன்கள் அரிதாகத்தான் பார்க்க முடியும்.

ஒடிசா கடற்கரையில் இப்படி அரிய வகை மீன் கிடைப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, பத்ரக் மாவட்டத்தில் உள்ள சந்த்பாலியில் இருந்து 32 கிலோ எடையுள்ள மீனை மீனவர் ஒருவர் பிடித்துள்ளார். அந்த மீன் ரூ. 3 லட்சத்திற்கு விற்பனையானது.

Also Read: உக்ரைனுக்கு வைத்த குறி.. தவறி போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை?: 2 பேர் பலி: உலக நாடுகள் கண்டனம்!