உலகம்

உக்ரைனுக்கு வைத்த குறி.. தவறி போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை?: 2 பேர் பலி: உலக நாடுகள் கண்டனம்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனுக்கு வைத்த குறி.. தவறி போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை?: 2 பேர் பலி: உலக நாடுகள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

உக்ரைனுக்கு வைத்த குறி.. தவறி போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை?: 2 பேர் பலி: உலக நாடுகள் கண்டனம்!

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. மேலும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்துள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உக்ரைனுக்கு வைக்கப்பட்ட குறி தவறி போலந்து நாட்டில் விழுந்தது தெரிகிறது. இந்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல உலக நாடு தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா இதுவரை இந்த தாக்குதலுக்குப் பதில் அளிக்கவில்லை.

உக்ரைனுக்கு வைத்த குறி.. தவறி போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை?: 2 பேர் பலி: உலக நாடுகள் கண்டனம்!

இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து அதிபர் ஆண்ட்ரேஸ் டுடாவை தொடர்பு கொண்டு "அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று பைடன் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரெஞ்சு அதிபர் இமானுவேன் மாக்ரோனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து நேட்டோ நாட்டு தூதரக அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

banner

Related Stories

Related Stories