Viral
வர்லாம் வர்லாம் வா.. Ambassador-ஐ தொடர்ந்து மீண்டும் புது பொலிவுடன் கெத்தாக வர உள்ள Contessa கார்!
உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுபுதுக் கார்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏன்! எலான் மஸ்க் கூட மின்சார கார்களை அறிமுகம் செய்து கார்கள் யுகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய புதிய கார்கள் வந்து கொண்டே இருந்தாலும், பழைய கார்களுக்கான மவுசு எப்போதும் குறையாமல்தான் இருந்துவருகிறது. அப்படி மவுசு குறையாத பழைய கார்களின் ஒன்றுதான் Contessa. இந்த காரின் விற்பனை 2002ம் ஆண்டோடு நின்றுவிட்டாலும் இதன் மீதான காதல் இன்றும் கார் பிரியர்களுக்கு குறையாமல்தான் இருந்து வருகிறது.
இந்நிலையில் Contessa கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுதான், மீண்டும் இந்திய சந்தையில் மின்சார காராக Contessa-வை இந்துஸ்தான் மோட்டார்ஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்திய சந்தையில் 1980களில் இருந்து கொடிகட்டி பறந்தது Contessa கார். புதிய தொழில்நுட்பங்களுடன் பல விதமான கார்கள் வந்ததால், 2002ம் ஆண்டு இந்திய சந்தையின் இதன் மீதான விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் காண்டேசா காருக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் Contessa கார் விற்பனைக்கு வர உள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும் Contessa கார் பழைய வடிவமைப்புடன், புதிய தொழில்நுட்புகளை கொண்டு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரை HM Contessa ரெட்ரோ மாடன் ஸ்டைலில் 2023 அல்லது 2024ம் ஆண்டு வெளியிட இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் பழைய அம்பாசடர் காரை புதிபொலிவுடன் கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், Contessa காரையும் மின்சார காராக இந்துஸ்தான் நிறுவனமே அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!