Viral
விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூபன்.. ‘கச்சா பாதாம்’ பாடலை பாடியவருக்கு என்ன ஆனது?
மேற்கு வங்க மாநிலம் லக்ஷ்மிநாராயணபுர் பஞ்சாயத்தில் உள்ள குரல்ஜுரி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் பூபன் பாத்யகர். இவர் நாட்டுப்புற பாடலை பாடி மக்களின் கவனத்தை ஈர்த்து வேர்க்கடலை விற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்.
அந்த வகையிலேயே சில நாட்களுக்கு முன்பு கச்சா பாதாம் பாடலை தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார் அந்த பூபன். அப்போது இதனைப் பதிவு செய்த சிலர் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்தப் பாடல் செம ஹிட் ஆகவே அதனை ராப் இசை கலைஞர்களான ரான் - இ மற்றும் பிரக்யா தத்தா ஆகிய இருவரும் இணைந்து ரீமிக்ஸ் செய்து கச்சா பாதாம் பாடலை வெளியிட்டனர்.
அப்படி ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடலில் வேர்க்கடலை வியாபாரி பூபன் பாத்யகரையும் நடிக்க வைத்துள்ளனர். இந்தப் பாடல்தான் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் பூபன் சுவற்றில் மோதி காயமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தனது சொந்த மாநிலத்தில் இருந்து வேலைக்குச் செல்வதற்காக வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரின் வாகனம் அருகில் இருந்த சுவற்றில் மோதி, இவர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில் முகம் மற்றும் உடம்பில் லேசான காயங்களுடன் மயங்கிய பூபன் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!