Viral

தெரியாமல் குப்பைத் தொட்டியில் விழுந்த LAPTOP: ஒரே நிமிடத்தில் காணாமல் போன 3000 கோடி ரூபாய்- நடந்தது என்ன?

உகலகம் முழுவதும் கிரிப்போட கரன்சியின் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் 2010ம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆறு கிரிப்டோ கரன்சிகளை வாங்கியுள்ளார்.

அப்போது அந்த இளைஞர் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாதால் கிரிப்டோ கரன்சி வாங்கியதை மறந்துவிட்டார். தற்போது அந்த இளைஞருக்கு கிரிப்போட கரன்சி குறித்து நினைவிற்கு வந்துள்ளது.

இதையடுத்து வீட்டில் வைத்திருந்த பழமையான மடிக்கணினியை தேடிப்பார்த்துள்ளார். ஆனால், அந்த மடிக்கணினி கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயிடம் மடிக்கணினி குறித்து கேட்டுள்ளார். அப்போது அதை குப்பை தொட்டியில் வீசியதாக அவர் மகனிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த இளைஞர் வாங்கிய ஆறுஆயிரம் கிரிப்டோ கரன்சியின் ஒட்டுமொத்த மதிப்பு தற்போது 300 மில்லியன் பவுண்டுக்கு வளர்ந்துள்ளது. இது இந்திய மதிப்புப்படி ரூ. 3 ஆயிரம் கோடியாகும்.

Also Read: ஒத்த ஓட்டு வாங்கியதால் கதறி அழுத வேட்பாளர்.. உள்ளாட்சி தேர்தலில் நடந்தது என்ன?