இந்தியா

ஒத்த ஓட்டு வாங்கியதால் கதறி அழுத வேட்பாளர்.. உள்ளாட்சி தேர்தலில் நடந்தது என்ன?

குஜராத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ஒத்த ஓட்டு வாங்கியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒத்த ஓட்டு வாங்கியதால் கதறி அழுத வேட்பாளர்.. உள்ளாட்சி தேர்தலில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் வாபி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவர் சார்வாலா கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவருக்கு போட்டியிட்டார்.

இந்த தேர்தல் முடிவில் அவருக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. அந்த ஒரு ஓட்டும் அவர் வாக்களித்ததாகும். இந்த தொகுதியில் அவரது குடும்பத்தில் 12 வாக்குகள் உள்ள நிலையில் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தைப் பார்த்து அந்த வேட்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்தினர் கூட தனக்கு வாக்களிக்காததை அறிந்து சந்தோஷ் வாக்கு எண்ணும் மையத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் பா.ஜ.க வேட்பாளர் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியது இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர் ஒத்த ஓட்டு வாங்கியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories