Viral
சமூகநீதி காத்த பகுத்தறிவுப் பகலவன்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் தந்தை பெரியாரின் டிஜிட்டல் ஓவியம்!
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை “சமூகநீதி நாள்” என அறிவித்து அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த “சமூகநீதி நாள்” உறுதிமொழியையும் எடுத்துவருகின்றனர். மேலும் சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என தந்தை பெரியாரின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் வரைந்த தந்தை பெரியாரின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தந்தை பெரியாரின் ஒவியங்களை வரைந்த பொன்வண்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!