Viral

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட எச்.ராஜா: ஐகோர்ட்டைத் திட்டி மன்னிப்பு கேட்ட 2ம் நினைவு நாள் இன்று!

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தை அவதுறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இன்றுடன் இரண்டாண்டாகிறது. இதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா-வின் பேச்சுக்கள் சமூக வலைதங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக கண்டனங்களும் குவிந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதியின்றி, பா.ஜ.க-வினர் வைத்த மேடைக்கு போலிஸார் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா போலிஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவதாத்தில் ஈடுபட்டார்.

அந்த வாக்குவாதத்தின் போது, போலிஸாரைக் கடுமையாக சாடிய எச்.ராஜா நீதிமன்றத்தையும் அவதூறு வார்த்தைகளால் அவமதிக்கும் வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து செப்டம்பர் 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எச்.ராஜா மீது தொடர்ந்தது. மேலும் நீதிமன்றத்தில், நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என மறுத்தார் எச்.ராஜா.

நீதிமன்றத்தின் கெடுபிடி விசாரணைக்கு பிறகு, எச்.ராஜா பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “அந்த வீடியோவில் உள்ள வார்த்தைகள் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் பேசியவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன். அந்த வீடியோவைப் பார்த்த பிறகு தான் என் தவறை உணர்ந்தேன். இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் என்ற அமைப்பின் மீது கொண்ட கண்ணியத்தை காப்பதற்கான, கவலைகொண்டே இந்த வழக்கை எடுத்துக்கொண்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர் மன்னிப்புக் கோரியதால் இந்த அவமதிப்பு வழக்கை முடித்துக் கொள்வதாக கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இருப்பினும், ஹெச்.ராஜா பேசிய வார்த்தைகள், நீதிமன்றத்தை இழிவுபடுத்தும்படி இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இன்றும் பலரும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நீதித்துறைக்கே எச்.ராஜா இழுக்கைத் தேடித் தந்தும் அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பல சமூக ஆர்வலர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, நீதிமன்றத்தில் எச்.ராஜா மன்னிப்பு கேட்டு இரண்டாண்டு நிறைவான நாளான இன்று, பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: சாரணர் தேர்தலில் தோல்வி, போலிஸை திட்டி மன்னிப்பு என வரலாற்றில் எச்.ராஜாவின் க்ரைம் ரேட் கூடிய நாள் இன்று!