Viral
‘என்னை போலிஸ் தொல்லை பண்றாங்க..’ : கஞ்சா போதையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் !
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் , சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் அரைநிர்வாணமாக நுழைந்த சீனிவாசன் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு கதறியிருக்கிறார்.
தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்றும் கூச்சல் போட்டிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திலேயே, இளைஞர் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!
-
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு : பழிவாங்கும் ஒன்றிய அரசு!
-
தமிழ்நாட்டில் 193 உழவர் சந்தைகள் - 3 லட்சம் நுகர்வோர்கள் பயன் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
-
”சமத்துவத்தை உருவாக்கும் பயணத்தில் ஒரு மைல்கல்” : திராவிட மாடல் அரசை பாராட்டிய முரசொலி!
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!