Viral
கழுதைக்கு பெயிண்ட் அடித்து வரிக்குதிரையாக மாற்றிய ஹோட்டல் நிர்வாகம் : விலங்குகள் நல வாரியம் எச்சரிக்கை !
நவீன காலம் என்பதால் பழமையான திருமண நடைமுறைகளை விடுத்து Theme சார்ந்த திருமணங்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் இதுபோன்ற திருமணங்களில் நடக்கும் சொதப்பல் சம்பவங்கள் சுவாரஸ்யமானதாக அமைந்துவிடுகிறது.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள காடீஸ் என்ற கடற்கரை நகரத்தில், safari-themed wedding வரவேற்பு நிகழ்வு நடந்துள்ளது. இது காட்டு விலங்களை காட்சிக்கு வைத்து நடத்தப்படும் திருமணம் ஆகும். அதில், 2 வரிக்குதிரைகள் பீச் ரெசார்ட் பகுதிக்கு அருகே உள்ள புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருப்பதை சிலர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் சென்று பார்த்தபோது, அவை இரண்டும் வரிக்குதிரைகள் அல்ல, கழுதைகள் என்று தெரியவந்துள்ளது. வரிக்குதிரைகள் கைவசம் இல்லாததால், கழுதைகளுக்கு வெள்ளை மற்றும் கருப்பு பெயிண்ட் அடித்து வரிக்குதிரை போன்று மாற்றியுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் இதை மாகாண நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், ஏஞ்சல் தாமஸ் என்கிற விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், சுற்றுலா பயன்பாட்டுக்காக அழிவு நிலையில் உள்ள கழுதைகளை பயன்படுத்தியுள்ளது வெட்கக்கேடான செயல் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கழுதைகளை வரிக்குதிரைகளாக மாற்றியது தொடர்பாக காடீஸ் விவசாயத்துறைக்கும், வணிகத்துறை விசாரணை மேற்கொண்ட போது, சஃபாரி தீம் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு வரிக்குதிரைகள் கிடைக்க பெறாததால் கழுதைகளுக்கு பெயிண்ட் அடித்து வரிக்குதிரையாக மாற்றப்பட்டுள்ளதாக நட்சத்திர விடுதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!