Viral
‘குடிக்க காசு தரமாட்டியா, அப்போ செத்துப் போ..’ : குடி வெறியில் தந்தையைக் கொன்ற மகன் - அதிர்ச்சி வீடியோ
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சந்திரலபாடு என்ற கிராமத்தில் மெஹபூர் சாஹிப் என்ற 70 வயது முதியவை பெற்ற மகனே கொலை செய்ய முயற்சித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் முதியோர் பென்ஷனை பெற்று வரும் மெஹபூர் சாஹிப்பிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் அவரது மகன் ஷேக் ஷீலாத். ஆனால், பணத்தைக் கொடுத்தால் அதை மது குடித்து வீணாக்கி விடுவார் என்பதால் சாஹிப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த ஷேக், தந்தையின் கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது அவரது தாய் கதறி அழுதும் மனம் இறங்காமல், ‘காசு தரமாட்டியா.. அப்போ செத்துப்போ..’ என போதையின் உச்சியில் முதியவர் சாஹிப்பின் கழுத்தை நெறித்துள்ளார்.
பின்னர் மயக்கமடைந்த முதியவர் சாஹிப்பை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிகிச்சை பலனழிக்காமல் சாஹிப் உயிரிழந்தார்.
முன்னதாக தனது தந்தையை கொல்ல முயன்ற ஷேக்கின் செய்கையை செல்போனில் வீடியோ எடுத்து போலீசிடம் புகாரளித்துள்ளார் சாஹிப்பின் மகள். இதனையடுத்து, போலீசார் ஷேக் ஷீலத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வயதான தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது, அது பார்ப்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!