Viral
“சென்னையை மழை தான் காப்பாற்ற வேண்டும்” : பிரபல ஹாலிவுட் நடிகர் வேதனை!
மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும் என பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘டைட்டானிக்’, ‘தி ரெவனன்ட்’ உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோவுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர், பிபிசி செய்தித் தளத்தில் வெளிவந்த தமிழகத்தில் நிலவும் தண்ணீர் வறட்சி பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிட்டு தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிபிசி செய்தித் தளத்தில் சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. சென்னையின் நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் வறண்டதால் பெரும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அனுபவிக்கும் அன்றாட சிக்கல்களை முன்வைத்து அந்தச் செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்தது பிபிசி.
இதைக் குறிப்பிட்டுள்ள லியானர்டோ, “மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்றமுடியும். தண்ணீர் தரும் கிணறுகள் முற்றிலுமாக வறண்டிருக்கின்றன. ஏரிகள் வறண்டுவிட்டன. இந்தியாவின் தெற்குகோடி நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.
குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக அங்கு பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.” என அவர் பதிவு செய்துள்ளார்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!