Tamilnadu
நாகர்கோவில் ரயில் பெட்டிக்குள் பெண் வன்கொடுமை & கொலை.. DGP-க்கு கெடு விதித்த தேசிய மகளிர் ஆணையம் -விவரம்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இரயில் நிலையத்தில் இருந்த இரயில் பெட்டிக்குள் கடந்த நவ.18-ம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. அதன்படி அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது, பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த உடலை மீட்டு போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், செண்பகராமன்புதூரைச் சேர்ந்த அய்யப்பன் (31) என்பவரை கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 14-ம் தேதி அதிகாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவரை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரயில் நிலைய வளாகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடங்களில் பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும், இத்தகைய கொடூரமான சம்பவங்களுக்குக் கடுமையான பொறுப்புக்கூறலும், பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஆறே மாசம், எல்லாமே நாசம்! மூடநம்பிக்கைகளில் ஊறிப்போன இவர்கள்தான்...” - விஜயை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!
-
“கோமாளி ஆட்சியின் வெட்டி Ego-வால் துயரில் நிற்கும் விவசாயிகள்” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!
-
“த.வெ.க அமைச்சர்களின் செயலால் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு” : கீதா ஜீவன் விமர்சனம்!
-
பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!
-
ரேஷன் அரிசியில் மொய்க்கும் வண்டுகள்.. வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்-திருச்சியில் பரபர!