Tamilnadu
“பணத்தைக் கொடுத்து ஓட்டுகளையும் விலைக்கு வாங்க தூய சக்தி விஜய்” : DMK IT WING விமர்சனம்!
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 06-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு த.வெ.க பணப்பட்டுவாடா செய்வதாகத் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், த.வெ.க அரசு ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், த.வெ.க-வினர் தீவிரமாகப் பணப்பட்டுவாடா செய்வதாகக் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியார்களிடம் கூறிய பெ.சண்முகம்,” இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தவெகவினர் அதிகளவில் பணம் கொடுப்பதாக வாக்காளர்களே எங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். ‘வாக்குக்குப் பணம் கொடுக்க மாட்டோம்; நாங்கள் தூய சக்தி’ என விஜய் பேசுகிறார்.
ஆனால், பொதுமக்களே இதுகுறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். எனவே, முதலமைச்சர் விஜய் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உங்கள் தூய சக்தி நன்றாக பல் இளிக்கிறது விஜய் என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சித்துள்ளது.
இதுறித்து வெளியிடப்பட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தவெக-விற்கு ஆதரவளித்த கட்சியினரே, தவெக தரப்பில்தான் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுவதாக வெளிப்படையாகக் கூறுகின்றனர்
தாங்களே 'தூய சக்தி' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விஜய், பொட்டி கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியது போல, தற்போது பணத்தைக் கொடுத்து வாக்காளர்களின் ஓட்டுகளையும் விலைக்கு வாங்க நினைக்கிறார். உங்கள் தூய சக்தி நன்றாக பல் இளிக்கிறது விஜய்” என தெரிவித்துள்ளது.
Also Read
-
படுதோல்வியடைந்த தவெக.. அமோக வெற்றி பெற்ற திமுக.. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது?
-
“பா.ஜ.க.வைப் பற்றி பேசுவதற்கு முதுகெலும்பு உண்டா? விஜய் என்ன மாவீரனா?” - விஜயை பந்தாடிய முரசொலி!
-
“பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க ; முதல்முறையாக உண்மையை சொன்ன விஜய்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!
-
தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!