தமிழ்நாடு

அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்

மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியைப் பழிவாங்கும் தவெக அரசின் அதிகார அத்துமீறல். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவதா என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்வெட்டு பிரச்சினை தொடர்கதையாகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலையில் இறங்கி போராடும் சூழலிலும் தவெக அரசு இந்த மின்வெட்டு பிரச்சினையை தீர்ந்தபாடில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அண்மை காலமாக தலைமை செயலகம், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்த சூழலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிக்கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், மின்வாரிய இளநிலைப் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவெக அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவதா என முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியைப் பழிவாங்கும் தவெக அரசின் அதிகார அத்துமீறல்! அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவதா?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இளமின் பொறியாளர் அ.அண்ணாதுரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒரு அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார்?

தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் 'மின்வெட்டா' என்பதையெல்லாம் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்

குறிப்பாக, அண்ணாதுரை அவர்கள் தி.மு.கழகத்தின் தொழிற்சங்கமான தொமுசவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு அரசு ஊழியரின் பணித்திறன் மற்றும் பொறுப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, அவர் எந்தத் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் நிலையில், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய தவெக அரசு, இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், அவற்றைத் திசைதிருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

எனவே, இளமின் பொறியாளர் அ.அண்ணாதுரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மின்தடை ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையான விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்.

banner

Related Stories

Related Stories