Tamilnadu
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என முதலமைச்சர் விஜய்க்கு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, ”சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்று உரிய பதிலை அளிக்கவில்லை. காவல்துறை குறித்த கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தராவிட்டாலும், விரைவிலாவது பதில் தந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டு, 'தேடினேன் தேடினேன் எதுவுமே கிடைக்கவில்லை' என்பது போலப் பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார்.
இந்த 100 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அவர் சொல்லவில்லை. செத்த பாம்பை அடிப்பது போல எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேசுகிறார். அது பற்றி அவருக்கு முழுமையாகத் தெரியுமா?அண்ணா சாலையில் உள்ள அண்ணா திரையரங்கம் யாருக்குச் சொந்தம் என்று
இன்று விஜய்க்குத் தெம்பும் திராணியும் இருந்தால், அதனுடைய உண்மைத்தன்மை குறித்துப் பேச வேண்டும்.
சர்க்காரியா கமிஷன் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தில் கொண்டுவரப்பட்டது. அப்படிப்பட்ட தருணத்தில், இந்திரா காந்தி அம்மையாரே 'எனக்குத் தெரியாமல் சில விஷயங்கள் நடந்துவிட்டன' எனக் கலைஞரிடம் நேரடியாகவே மன்னிப்புக் கேட்டார். இதெல்லாம் திடீரென முளைத்த காளான்களுக்குத் தெரியாது.சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? சர்க்காரியா கமிஷன் குறித்து எதுவும் தெரியாத முதலமைச்சர், ஸ்கிரிப்ட் யார் எழுதிக் கொடுத்தாரோ அவரிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எங்கள் கட்சியில் இருந்தபோது எம்.ஜி.ஆர். பாடல்கள் எல்லாம் தத்துவப் பாடல்களாக இருந்தன. ஆனால், இவருடைய திரைப்படங்களும் பாடல்களும் எவ்வாறு இருக்கின்றன என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எப்படியோ ஒன்று, விஜய் அவருடைய பார்வையாளர்களைத் திருப்திபடுத்திவிட்டார்
இன்று அமைச்சர் காரில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்; மேலும், கட்சி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் சட்டசபையில் பேசியிருக்க வேண்டும். ஆனால், அது குறித்து எதையுமே பேசவில்லை.இன்று முதலமைச்சர் விஜய் முழுப் பெரும்பான்மையோடு (மெஜாரிட்டி) வெற்றி பெற்றது போலப் பேசுகிறார். சிலரின் ஆதரவோடுதான் இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த ஆட்சி சரிந்துவிடும். இவரை விடப் பெரிய ஜாம்பவான்களைப் பார்த்து வளர்ந்த கட்சி இது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதை படிக்க 3 நாட்கள் எதற்கு? Prepare Well Next Time : முதலமைச்சர் பதிலுரைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் திட்டமிட்டு அனுமதி மறுத்த சபாநாயகர் : தர்ணா - தி.மு.க வெளிநடப்பு!
-
த.வெ.க அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி : நடந்தது என்ன?
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!