Tamilnadu
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வீட்டின் முன்பகுதித் தளம் சாலையை நோக்கி அமைந்ததால், உடனே அதைச் சரிசெய்து தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க வட்டச் செயலாளரான ராகுல் என்பவர், "நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளோம், எங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்" என்று கூறி, கடந்த மூன்று நாட்களாகக் கூலித் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து, 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாக அந்தப் பெண்மணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், "ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கொடுத்துக் கூலித் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி வருகிறேன். நானே ஏற்கனவே கூலித் தொழில் செய்துதான் இந்த வீட்டைச் சிறுகச் சிறுகக் கட்டி வருகிறேன். தன்னிடம் 50,000 ரூபாய் கேட்டு மிரட்டி, வீட்டைத் தொடர்ந்து கட்ட விடாமல் த.வெ.க நிர்வாகி தடுத்து வருகிறார். இதனால் வீடு கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது எனது பிள்ளைகள் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வருவதால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்தப் பெண்மணி, தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற வேதனையுடன் தனது உறவினர்களுடன் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துத் தனக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தினார்.
Also Read
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!