Tamilnadu
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தி.மு.க. ஆட்சியில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளைக் கல்வியிலும், அறிவிலும், சிந்தனையிலும், ஆற்றலிலும் முதன்மை பெறச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.'
நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 28 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, UPSC முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தலா ரூ.25,000 ஊக்கத்தொகையுடன், தங்கிப் படிக்கும் வசதியும் செய்துகொடுக்கப்பட்டது .
இதனால், UPSC தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இப்படித் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்திவரும் 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரைத் தற்போது த.வெ.க. அரசு மாற்றியுள்ளது. மேலும், இத்திட்டத்தைச் சிதைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நீங்கள் நான் முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”