Tamilnadu
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காசிகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் இவரது மனைவி ரத்தினத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால், ரத்தினம் ஆலணம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி, கூலி வேலை செய்துகொண்டு தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மதியம் முதல் தனது இரண்டு மகன்களையும் காணவில்லை எனத் தாய் ரத்தினம் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார்.
இந்தச் சூழலில், இன்று மதியம் அங்குள்ள குளத்தில் சிறுவர்களின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அம்பளிக்கை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் ஆறுமுகம் - ரத்தினம் தம்பதியரின் மகன்களான வேல்முருகன் , லோகேஸ்வரன் ஆகிய அண்ணன், தம்பி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அம்பளிக்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் விளையாடச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!