Tamilnadu
அதிர்ச்சியில் தமிழ்நாடு: ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய 5 கொடூரச் சம்பவங்கள்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 சிறுமிகளுக்குப் பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்ட கொடூரச் சம்பவங்கள் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கும்மிடிப்பூண்டி:-
கஞ்சா போதையில் இருந்த நபர்களால் 3 வயதுக் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் நடந்துள்ளது.
பூந்தமல்லி:-
7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:-
10 வயது சிறுமிக்குத் தொல்லை கொடுத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்:-
7-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் ஆட்டோவில் அத்துமீறிப் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நந்தகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குற்றங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிங்கப் பெண் படை தொடங்கிய பிறகுதான் இந்த குற்றங்கள் அரங்கேரியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்." என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!