Tamilnadu

“காற்று நின்றால் தான் தெரியும், எது பறவை எது காகிதம் என்று” : கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes

தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

* கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாதென்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாதென்பதற்காக!

* அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?

* நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே... உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?

* படிச்சவன் பட்டணத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு எதாச்சும் பதவி போஸ்ட்டுகள தேடிக்கிட்டு தன்னையும் ஒரு உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவ்லா பண்ணிக்கிறானே தவிர, அவனால இந்த சமுதாயத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன் கூட கிடையாது.

* வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்!எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.

* எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.

* நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!

* இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!

* வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள். ஒரு திருத்தம். வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.

* ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவி வந்தாலும்-மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.

* மனச்சாட்சி உறங்கும் போது தானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.

* உலகத்திலேயே மலிவானது உபதேசம் ஒன்றுதான். உபதேசிகள் பலர் அதனை மலிவாக விற்றுவிட்டுத் தங்கள் கடையைக் காலியாக வைத்திருப்பார்கள்.

* பெரும்பான்மை, உடலைப் போன்றது.சிறுபான்மை, கண்களைப் போன்றது.உரிமைகள் அனைத்தும் பெரும்பான்மைக்குத்தான் என்று சொல்லி சிறுபான்மையினரைப் புறக்கணிப்பது;கண்களைக் குத்திக் கொள்கிற குருட்டுச் செயலாகும்.

* இசைக்கு மொழி இல்லை: ஆனால் மொழிக்கு இசை தேவை. அதனால்தான் தமிழிசை இயக்கம் தோன்றியது.

* நாம் - ஜனநாயகம். நான் - சர்வாதிகாரம்.

* “துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை”

* பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள்.. பகைவர் இல்லாமலே தமக்கு தாமே குழி வெட்டிக்கொள்வார்கள்!

* அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை!

* “உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்”

* ”உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்!”

* "அடிக்கிற காற்றில் பறவையும் பறக்கும், காகிதமும் பறக்கும். காற்று நின்றால் தான் தெரியும், எது பறவை எது காகிதம் என்று." -

Also Read: “சரித்திரம் எழுதி, சாதனை படைத்து, சகாப்தமாக வாழ்கிறார் கலைஞர்”: தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டி புகழாரம்!