Tamilnadu
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி: உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், 9 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட த.வெ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.
அ.தி.மு.க இத்தொகுதியில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சராகவும், பின்னர் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
தற்போது வரை தி.மு.க கூட்டணி 72 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!