Tamilnadu
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கழக இளைஞரணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மற்றும் தேனி மாவட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட மச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மதுரையில் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, தொகுதிமறுவரையறைக்கு எதிராக கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறைகூவலுக்கு ஏற்ப, கருப்பு உடை அணிந்து மசோதா நகலை எதிர்த்து தனது எதிர்ப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்தார்.
பிறகு ”சுயமரியாதைக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பா.ஜ.க.வின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது! கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த உரிமைத் தீ இந்தியாவெங்கும் பரவட்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பி.மூர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.
தொடர்ந்து சோழவந்தான் தொகுதி கழக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பிரச்சார பரப்புரையில் ஈடுபட்டார். இதற்கடுத்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாம் செய்தார்.
Also Read
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!