Tamilnadu
தமிழ்நாடெங்கும் ஹிட்: ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" இணையத்தில் வைரல்!
2021 சட்டமன்றத் தேர்தலில் “ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தரப் போறாரு” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக இது அமைந்தது. மக்கள் மனதில் இப்போதும் நீங்காத ஒரு தேர்தல் பரப்புரைப் பாடலாக இது இருந்து வருகிறது.
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பாடலை தி.மு.க வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக,
”பெரும் பெரும் பருந்து
வரும் வரும் ஒளிஞ்சு நடிப்பினை புரிஞ்சு
விரட்டுவோம் துணிஞ்சு
ரௌத்திரம் தான்.. சௌத் சைடு இந்தியா பார்..
ஜாக்கிரதை தப்பாக தொட்டாக்கா வார்..
அகர முதல தொட்டு..
தாடி கிழவன் பிளட்டு..
அறிஞர் அண்ணா பிளட்டு..
தலைவர் கலைஞர் பிளட்டு..
சொன்ன தெல்லம் செஞ்சி முடிச்ச
சிரிச்ச தலைவன்டா..
மக்களை பிரிக்க நினைக்கும்
சாதி மதத்தையும் சாக்கடை புத்தியையும்
எதிர்த்த இயக்கம்டா..
ஊருக்குல் நீதியை வெதச்ச இயக்கம்டா.
பூமிக்கு வெளிச்சம் தந்த சூரியனே..
மிரண்டு கிடந்த நெஞ்சுக்குள்ள தைரியம் தந்த திராவிடனே..
மீண்டும் வா தலைவனே..
வென்று வா ஸ்டாலினே..
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்"
என்ற வரிகள் கேட்பவர்களை ரௌத்திரம் கொள்ளச் செய்கின்றன.
இந்த வரிகள் அடிமை அ.தி.மு.க கூட்டத்தையும், பாசிச பா.ஜ.கவின் சதித் திட்டத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே இந்தப் பாடல் ஆடியோவாக வெளியாகி வைரலானது. தற்போது வீடியோவாக இந்தப் பாடல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது 7 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து இந்தப் பாடல் சாதனை படைத்துள்ளது.
“ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தரப் போறாரு” என்ற பாடலை போல் ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" பாடலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!