Tamilnadu
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
நாடே எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை குழு கடந்த ஜன.19-ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் தொடங்கப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உறுப்பினர்கள் - கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் - அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் - எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து வரும் நிலையில், இதுவரை திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.
அதன் விவரம் வருமாறு :
1. காங்கிரஸ் - 28 தொகுதிகள்
2. ம.தி.மு.க. - 4
3. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - 2 தொகுதிகள்
4. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2 தொகுதிகள்
5. மனிதநேய மக்கள் கட்சி - 2 தொகுதிகள்
6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மதிமுக 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 2 தொகுதிகள் என 7 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
Also Read
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!
-
சட்டம் ஒழுங்கு பற்றி பேச மிக்சர் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? : முரசொலி கடும் விமர்சனம்!
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்