Tamilnadu
“அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரோஜா!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை துறைமுகம் பகுதியில் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது. இதில் ஆந்திரா முன்னாள் அமைச்சருமான ரோஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ரோஜா, " தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில்
தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தை வேறு எந்த மாநிலத்திலும் பார்த்ததில்லை. ஏழை, எளிய மாணவர்களின் பசியை இந்த திட்டம் போக்கி வருகிறது.
அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டு மகளிர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ரூ.1,500 தருவதாக சொல்லி 2 வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட அவர் வழங்கவில்லை. தமிழ்நாட்டில் முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னபடியே மாதம் மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறை மற்றும் நிர்வாக அனுபவம் அவரைப் பிற மாநிலத் தலைவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாற்றியுள்ளது . "திராவிட மாடல்" அரசின் திட்டங்கள் மற்றும் சமூக நலனுக்காக முதலமைச்சர் எடுத்து வரும் முயற்சிகள் அனைவராலும் போற்றத்தக்கவை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!