Tamilnadu
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு... : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்!
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் ஆர்.பிரியா இன்று ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:-
1.மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை சுற்றுலாப் பயணிகளுக்காக ரோப் கார் சேவை வசதி தொடங்கப்படும்.
2.சென்னையில் வீடு இல்லாதவர்களுக்காக ரூ.12 கோடி செலவில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
3.கோடை காலங்களில் வெப்பத்தைத் தணிக்க மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும்.
4.மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும்.
5.ரூ.4 கோடி செலவில் 11 புதிய பள்ளி பேருந்துகள் வாங்கப்படும்.
6.மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க நவீன அறிவியல் மையம் அமைக்கப்படும்.
7.ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்.
8.ரூ.10 கோடி மதிப்பீட்டில் 'சென்னை பசுமை திட்டம்' செயல்படுத்தப்படும்.
9.முதற்கட்டமாக 200 பூங்காக்களைப் புனரமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10.மாநகராட்சி பூங்காக்களில் ரூ.20 கோடி செலவில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் அமைக்கப்படும்.
இம்முறை சென்னை மாநகராட்சி தனது முதல் காலநிலை பட்ஜெட் (Climate Budget) அறிக்கையையும் வெளியிட்டுள்ளது, இதில் மூலதனச் செலவினத்தில் 42% காலநிலை சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!